--- --:--:-- --

“என் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்” ரஜினி திடீர் முடிவால் பரபரப்பு!!

13

சென்னையில் உள்ள தனது போயஸ் தோட்ட இல்லத்திற்கு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு சென்னை காவல்துறைக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, சென்னை நகர துணை ஆணையர் திருநாவுக்கரசு ரஜினியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நடிகர் ரஜினி என்ன கருத்து கூறினாலும் சர்ச்சையாகி பரபரப்பாகி விடுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த ஜனவரி 9-ந் தேதி நடந்த துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. ரஜினியின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ரஜினி தனது கருத்தை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்திய பெரியார் இயக்கத்தினர் ரஜினியின் வீட்டை மு ற்றுகையிடுவோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் ரஜினியோ, தாம் கூறிய கருத்தில் தவறு இல்லை; அதனால் மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்று ஆணித்தரமாக தெரிவித்து விட்டார்.

 

இதனால் சர்ச்சை மேலும் வெடித்தது. இதைத் தொடர்ந்து ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு போலீசார் காவலுக்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து தர்பார் படப் பிரச்னையில் விநியோகஸ்தர்கள் பலரும் ரஜினியின் வீட்டின் முன் தர்ணா நடத்த முயன்றனர். அடுத்த குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, அச்சட்டத்திற்கு ஆதரவாக ரஜினி கூறிய கருத்து, டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கூறிய கருத்து போன்றவற்றால் ரஜினி பற்றிய செய்திகள் பரபரப்பாகவே உள்ளன. இதனால் ரஜினி வீட்டு முன் போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து வந்தது.

 

இந்நிலையில், தனது வீட்டின் முன் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்; போலீசாரை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் சென்னை காவல்துறை ஆணையருக்கு ரஜினி கடிதம் எழுதியிருந்தாராம். இந்தக் கடிதம் தொடர்பாக சென்னை நகர நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு, இன்று சென்னையில் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon