--- --:--:-- --

சிறார் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் இருவர் கைது

13

சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக மதுரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறார் ஆபாச பட விவகாரம் தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை ஆரப்பாளையத்தில் லாரி புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வரும் குமார் மற்றும் சொக்கலிங்கம் என்ற செந்தில்குமார் ஆகிய இருவர் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததாகவும், பகிர்ந்ததாகவும் சைபர் கிரைம் போலீசார் அளித்த தகவலையடுத்து மதுரை அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

 

தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon