--- --:--:-- --

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் பலி

13

ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து எதிர்பாராதவிதமாக கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள், 10 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒரு குடும்பத்தினர் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் உடன் சாவாய் மதபூர் என்ற இடத்திலிருந்து கோட்டா என்ற பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது பப்டிஎன்ற கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

விபத்தின்போது உயிருடன் மீட்கப்பட்ட சிலர் உள்ளூர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon