--- --:--:-- --

மெட்ரோ ரயிலில் இறைச்சி, மீனை கொண்டு செல்ல தடை

5

சென்னை மெட்ரோ ரயில்களில் சமைக்கப்படாத இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

 

மெட்ரோ ரயில்வே காரேஜ் டிக்கெட் விதிகள் 2014 இன் படி சமைக்கப்படாத மீன், இறைச்சி போன்றவை விலங்குகள் மற்றும் பறவைகளின் சடலங்கள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதால் அவை தடை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த விதிகளை மட்டுமே தாங்கள் பின்பற்றுவதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

பெங்களூர் மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் நன்கு பேக் செய்யப்பட்ட சமைக்கப்படாத மீனை கொண்டு சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து இந்த விதிகள் குறித்து தெரிய வந்தது. அதை போல மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் சமைக்கப்பட்ட உணவுகளை கொண்டு செல்ல அனுமதி இருந்தாலும் அவற்றை ரயிலில் சாப்பிட அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon