--- --:--:-- --

மனைவியை கொன்று நாடகம்… கணவர் – காதலி தற்கொலை !

7.1

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் கடூர் பகுதியை சேர்ந்த பல் மருத்துவர் ரேவந்த். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 7 மாத கைக்குழந்தையும், 5 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமாகி ஆறு மாதமான கவிதா வீட்டில் உள்ள கார் ஷெட்டில் கழுத்தறுபட்டு சடலமாக கிடந்தார்.

 

அவரை மர்ம நபர்கள் கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக ரேவந்த் போலீசில் புகார் அளித்தார். ஆனால் மருத்துவமனையில் நடந்த உடற்கூறு ஆய்வில் இடுப்பில் மயக்க ஊசி போடப்பட்டு பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

 

இதனால் ரேவந்த் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் விசாரித்த போது ரேவந்துக்கு பெங்களூருவை சேர்ந்த ஹர்ஷிதா என்ற இளம் பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டு அவரை சந்திக்க அடிக்கடி பெங்களூரு சென்றதுடன் இதனைத் தட்டிக் கேட்டதால் மனைவி கவிதாவை மயக்க ஊசி போட்டு பின்னர் கார் ஷெட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே தான் கொலை செய்திருப்பது அம்பலமானதையறிந்த ரேவந்த் கடூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே இதனை அறிந்த அவரது தோழி ஹர்ஷிதாவும் பெங்களூருவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கினார். இருவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon