“கைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்”..தமிழகத்துக்கு வரப்போவது இல்லை
கைலாசத்தை கட்டி முடித்து விட்டதாகவும், இனி தமிழகத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவான நித்யானந்தா ஈகுவடார் அருகே ஒரு தீவில் கைலாசம் என்ற தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கு எதிராக பிடிவாரண்ட், இன்டர்போல் மூலம் ப்ளூ கார்னர் நோட்டீஸ் உடைய நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தலைமறைவாக இருந்து கொண்டே நித்தியானந்தா சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுவது தொடர்கதையாகி வருகிறது.
புதிய வீடியோவில் அவர் 20 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கைலாசத்தை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




