திருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ
சென்னையில் திருமண வரவேற்பு ஒன்றில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று விருந்தினர்களை வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. அஜித் குமாரின் உதவியாளராக இருக்கும் சுரேஷ் என்பவரின் தங்கை மகளின் திருமண வரவேற்பு சென்னையில் லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அஜித்குமார் திருமண வரவேற்புக்கு வந்த விருந்தினர்களை வரவேற்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது அஜித்குமாருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பொது நிகழ்வு ஒன்றில் பூரண உடல் நலத்துடன் அஜித்குமார் தோன்றியது தங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




