நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது
நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகிறது. பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த மாநாடு திரைப்படம் நீண்ட இழுபறிக்குப் பிறகு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று படப்பிடிப்பை தொடங்குவது என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் படப்பிடிப்பை முன்கூட்டியே தொடங்கலாம் என சிம்பு தெரிவித்ததால் இன்றையதினம் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னை புறநகரில் 50 நாட்கள் ஷூட்டிங் நடைபெற உள்ளது. படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




