கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க குழந்தைக்கு அழைப்பு
அரவிந்த் கெஜ்ரிவால் போல உடை அணிந்து இணையத்தில் வைரல் ஆன குழந்தைக்கு அவர் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது ஆம் ஆத்மி கட்சிகாரர் ஒருவரின் குழந்தையான ஆபியம் தோமர் என்ற ஒரு வயது குழந்தை அச்சுஅசலாக கெஜ்ரிவால் போல உடையணிந்து அந்த கட்சியின் அலுவலகம் முன்பாக உலா வந்தது.

பலரது கவனத்தையும் ஈர்த்த அந்த குழந்தையின் புகைப்படம் இணையத்திலும் வைரலானது. இந்த நிலையில் வருகிற 16-ஆம் தேதி கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிகழ்வில் கலந்துகொள்ள அந்த குழந்தைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





