டாஸ்மாக் மூலம் இந்த ஆண்டு ரூ.30,000 கோடி வருவாய்

மாநிலத்தின் வருவாய் அதிகரிப்பதற்கு ஏற்ப வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கக்கூடிய கடன்களின் அளவு அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்று நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் மொத்த கடன் நான்கரை லட்சம் கோடி என்பது நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

 

டாஸ்மாக் மூலம் இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்தார். விரலுக்கு ஏற்ற வீக்கம் போல் மிகத்துல்லியமாக நன்றாக கணக்கிட்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் உட்பட அனைத்திற்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கிருஷ்ணன் தெரிவித்தார்.


Leave a Reply