--- --:--:-- --

கா தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்

2

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளன்றே நிதி அமைச்சரும், துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

 

காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கும் என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பட்ஜெட் கூட்டத்தொடர் இது தொடர்பாக அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. குடியுரிமை திருத்த சட்டம், டிஎன்பிஎஸ்சி முறைகேடு, அமைச்சர்களின் சர்ச்சை உள்ளிட்ட பிரச்சனைகளை பேரவைகளில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon