--- --:--:-- --

தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து…மாணவர் உயிரிழப்பு..!

3

பெரம்பலூர் அருகே பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

 

அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து குன்னம் அருகே ஒரு பெரிய ரோடு அருகே திரும்பியபோது அரியலூர் சிமெண்ட் சாலைக்கு சென்றுகொண்டிருந்த லாரியின் முன் பகுதியில் மோதியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 15 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

 

4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணையில் பேருந்தும் லாரியும், அதிவேகத்தில் வந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon