--- --:--:-- --

சுவீடன் நாட்டுப்பெண்ணை மணர்ந்த தமிழ் இளைஞர்

15

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ் இளைஞர் ஸ்வீடன் நாட்டு பெண்ணை தாலி கட்டாமல் மாலை மாற்றிக்கொண்டு சுயமரியாதை திருமணம் செய்தார். சானார் பாளையத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் தரணி.

 

இவர் சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் எம்எஸ் படித்த போது அந்த நாட்டை சேர்ந்த இளம்பெண் மரீனா என்பவருடன் நட்பாக பழகி காதல் வளர்ந்தது இருவரும் திருச்செங்கோட்டில் இன்று திருமணம் செய்து கொண்டனர்.

 

மணமகன் இந்து என்றாலும் சுயமரியாதைக் கொள்கை உடையவர் என்பதால் மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டாமல் செயின் மற்றும் மாலைகள் மட்டும் மாற்றிக்கொண்டு சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றது. முன்னதாக கிறிஸ்துவ வழக்கப்படி மோதிரம் மாற்றிக்கொண்டனர். ஹிந்து வழக்கப்படி மணமகனின் பெற்றோர் சம்பிரதாயங்கள் செய்வதுடன் அட்சதை தூவி வாழ்த்தினர்.

Leave a Reply

Right Menu Icon