கூகுள் மேப்ஸ் உருவானதன் 15வது ஆண்டு தினம்
கூகுள் மேப்ஸ் உருவானதன் 15 ஆவது ஆண்டு தினத்தை அந்நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் உலகம் முழுவதும் தமக்கு விருப்பமான உணவகங்களை கூகுள் மேப்பில் டேக் செய்து அது குறித்த புகைப்படத்தையும் அதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் உலக நாடுகளுக்கு பயணிக்கும் போது நல்ல உணவகங்களை கண்டறிந்தால் தான் உற்சாகம் அடைந்து விடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.






