பானிபூரி தயாரித்து தோனி அளிக்கும் வீடியோ வைரல்
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் ஆர் பி சிங், மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி பானிபூரி தயாரித்து அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ மாலத்தீவில் எடுக்கப்பட்டுள்ளது.
அதில் கைதேர்ந்த வியாபாரி போல பானி பூரியை பொறுமையாக தயாரித்து ஆர் பி சிங், மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோருக்கு தோனி அளிக்கிறார். இணையதளத்தில் பானிபூரி தயாரித்து தோனி அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த காட்சியை கண்ட தோனியின் ரசிகர்கள் எங்களுக்கு இந்த உலகில் மிகவும் பிடித்தது தோனியும் பானி பூரியும் தானென்று பந்துவீச்சாளர்களுக்கு பானிபூரி அளிக்கும் தோனி ஐபிஎல் போட்டிகளில் அவரது பந்துகளை சிக்ஸ்சர்களாக விளாசுவார்கள் என்றும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




