--- --:--:-- --

ஆஸ்திரேலிய ஓபன் டென்னில் போட்டியில் அனைவரையும் கவர்ந்த திருப்பூர் ஆடைகள்…!

2

அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பந்து எடுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவர்கள் அணிந்த ஆடைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. நெகிழி பாட்டில்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட அந்த வண்ண ஆடைகள் நம்முடைய திருப்பூரில் தான் தயார் செய்யப்பட்டவை.

 

ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் புகழ் பெற்றது தமிழகத்தின் திருப்பூர் நகரம். இங்கிருந்து சர்வதேச நாடுகள் பலவற்றுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தநிலையில் திருப்பூர் எம் சி ஜான்சன் பின்னலாடை நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஏற்பாட்டாளர்களிடமிருந்து ஆர்டர் வந்தது.

 

அதன்படி நடுவர்கள், பந்து எடுத்துக்கொடுக்கும் சிறுவர்கள், போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கான ஆடைகளை இந்த நிறுவனம் தயாரித்து அனுப்பியது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி பின் தூக்கி எறியப்படுகின்ற நெகிழி பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதிலிருந்து கிடைத்த நூல்களை கொண்டு இந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டன என்பது கூடுதல் சிறப்பு.

 

நெகிழி கழிவுகளை மறுசுழற்சி செய்து 25 ஆயிரம் ஆடைகள் தயாரிப்பதன் மூலம் சுமார் 2 லட்சம் பாட்டில்கள் மண்ணில் புதைந்து இயற்கையை பாழ்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ரசிகர்களை கவர்ந்தது வீரர்-வீராங்கனைகள் மட்டுமல்ல, பந்து எடுக்கும் பணியில் இருந்த சிறுவர்கள் அணிந்திருந்த வண்ண ஆடைகளும் தான்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon