காரை நிறுத்தாமல் 2 கி.மீ தூரம் காவலரை இழுத்து சென்ற கார்
டெல்லியில் வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்ற காரின் மீது ஏறிய போக்குவரத்து காவலர் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட வீடியோ இரு மாதங்களுக்கு பிறகு வைரலாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்றபோது லேசாக வேகத்தை குறைத்த அதன் ஓட்டுநர் பின்னர் வேகத்தை கூட்டினான்.
அவனை மடக்கி பிடிக்கும் நோக்கில் போக்குவரத்து காவலர் சுனில் காரின் முன்பக்கத்தில் ஏறியபோதும் காரை நிறுத்தாத ஓட்டுனர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டிச்சென்று காவலர் கெஞ்சிய பின்னர் இறக்கி விட்டுச் சென்றுள்ளான்.
அதனை காருக்குள் இருந்த மற்றொருவன் செல்போனில் படம் பிடித்த வீடியோ இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது வைரலான நிலையில் அது குறித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது.






