குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்..!மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, திமுக கூட்டணி சார்பில் கையெமுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி, தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் பாஜக, அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் ஒரு சில கட்சிகள் தவிர்த்து அனைத்து கட்சிகளுமே இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன.
இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்ட பேரணி. நடைபெற்றது. அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முதல் 8-ந்தேதி வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி, 3 கோடி பேரின் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




