--- --:--:-- --

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் 6.5 சதவீதம் வரை உயரும் என கணிப்பு

3

மத்திய நிதிநிலை அறிக்கையின் முன்னோட்டமாக பார்க்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

 

பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

 

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 2030ஆம் ஆண்டுக்குள் 8 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

நடப்பு நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 3.7 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாக அதிகரிக்கும் எனவும், நடப்பு நிதியாண்டில் மொத்த விற்பனை பணவீக்கம் 4.7 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு 461.2 பில்லியன் டாலர் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

நாட்டின் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி 13.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல நடப்பு நிதியாண்டில் தொழில்துறை வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு துறையில் தனியார் உதவியோடு அதிக அளவிலான முதலீடுகளை அரசு செய்ய உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிதில் தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 63 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

அமெரிக்கா, சீனா, அமீரகம், சவுதி அரேபியா ஹாங்காங் ஆகிய நாடுகள்தான் இந்தியாவுடன் நெருங்கிய வர்த்தக கூட்டாளிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் இரண்டு திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. திருக்குறளின் 76வது அதிகாரமான பொருள் செயல் வகையில் இடம்பெற்றுள்ள பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று என்ற குறள் இடம்பெற்றுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon