மதுரையில் இருந்து சீனாவிற்கு பறக்கும் மாஸ்க்
கொரானா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான மாஸ்க்குகளை தயாரிக்கும் பணிகள் மதுரையில் தீவிரமடைந்துள்ளன. வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க்குகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நரிமேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மிகவும் நுண்தன்மையோடு ஆறு அடுக்கு வடிகட்டி களைக் கொண்ட என்95 மாஸ்க்குகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் முழு உடலை பாதுகாக்கும் காலனி, கவர், தலைக்குல்லா உள்ளிட்டவைகள் மொத்தமாக அடங்கிய கிட் தயாரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.
சீனா அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து வியாபார கோரிக்கை வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




