“தலைவர் 168” படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் நடிகை நயன்தாரா
ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 திரைப்படத்தில் நடிகைகள் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாராவும் திரைப்படத்தில் இணைந்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சந்திரமுகி, குசேலன், தர்பார் திரைப்படங்களை தொடர்ந்து ரஜினியுடன் நயன்தாரா இணைந்துள்ளார்.
ஏற்கனவே திரைப்படத்தில் மூன்று நாயகிகள் வரும் வலம் வரும் நிலையில் நயன்தாரா என்ன கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




