காஷ்மீர் டிஎஸ்பி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு?
பயங்கரவாதிகளுக்கு உதவிய காவல் துணை கண்காணிப்பாளர் தாவேந்திர சிங் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணை வரும் திங்கள் அன்று தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாவேந்திர சிங் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஏகே47, கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், செல்போன் உள்ளிட்ட தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த 11ஆம் தேதி ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின்போது வேகமாக சென்ற காரை பிடித்த காவல்துறையினர் அதில் இருந்து காவல் துணை கண்காணிப்பாளர் தாவேந்திர சிங்கை பிடித்தனர்.
அவருடன் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நவீத் ஆசிப் முகமது ஆகியோரும் பிடிபட்டனர்.





