‘குற்றவாளிகளை மன்னியுங்கள்’ – நிர்பயாவின் தாய்க்கு ஆலோசனை கூறிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்
ராஜீவ் காந்தியை கொன்ற குற்றவாளிகளை மன்னித்துள்ள சோனியா காந்தியை உதாரணமாக எடுத்துக் கொள்ளும்படி நிர்பயாவின் தாய்க்கு பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அறிவுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான அநீதிக்கு சட்டரீதியிலான போராடும் பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தனது டுவிட்டரில் நிர்பயாவின் தாய் ஆஷா தேவியின் வேதனையை தாம் முழுவதுமாக அறிவதாகவும், எனினும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளி நளினியை மன்னித்த சோனியாகாந்தியை முன்மாதிரியாக பின்பற்றும்படி கேட்டுக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

நிர்பயாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினாலும் மரண தண்டனையை தான் எதிர்ப்பதாக இந்திரா ஜெய்சிங் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என நாடு எதிர்நோக்கி இருப்பதாக கூறியுள்ளார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஆஷாதேவி, இந்திரா ஜெய்சிங் போன்றோரின் ஆலோசனையை தான் ஏன் கேட்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.





