--- --:--:-- --

உலகின் மிகப்பழமையான பொருளை கண்டறிந்த ஆய்வாளர்கள்

4

உலகிலேயே மிகப் பழமை வாய்ந்ததாக கருதப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1969ஆம் ஆண்டு எரிகல் ஒன்று பூமியை நோக்கி வந்து ஆஸ்திரேலியாவில் விழுந்தது. இந்த ஏரிகளில் இருந்த துகள்களை அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

 

இதில் இந்த துகள்கள் 7அரை பில்லியன் ஆண்டுகள் அதாவது 750 கோடி ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. நமது சூரியக் குடும்பமே 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவானது. ஆனால் இத் துகள்கள் சூரிய குடும்பம் உருவாவதற்கு முன்பாகவே இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

 

இதன் மூலம் நட்சத்திரங்கள் எப்படி உருவாகின என்பது குறித்த ஆய்வுகளை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon