--- --:--:-- --

மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.4000

12

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை நான்காயிரம் ரூபாயை தொட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூக்களின் மகசூல் சரிந்தது, அதன் வரத்தும் குறைந்தது.

 

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2,000 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி படிப்படியாக உயர்ந்து. இன்று காலை நிலவரப்படி 4 ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான முல்லை ஆயிரத்து 300 ரூபாயிலிருந்து, 600 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோன்று காக்கரட்டான் கிலோ 1000 ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், ரோஜா 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Right Menu Icon