--- --:--:-- --

பல இடங்களில் தேர்தல் ஒத்திவைப்பு ஏன்..? மறைமுகத் தேர்தலில் முறைகேடு என திமுக புகார்!!

IMG-20200111-WA0088

மறைமுகத் தேர்தலில் அதிமுகவுக்கு பாதகமான ஒன்றியங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், தேர்தல் அதிகாரிகள் தன்னிச்சையாக தேர்தலை தள்ளி வைத்துள்ளதாகவும் திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பல இடங்களில் முறைகேடுகள் நடப்பதாக திமுக தரப்பில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

திமுக எம்.பி,டி.ஆர். பாலு தலைமையில் திமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர்.அதில் திமுகவுக்கு சாதகமாக உள்ள பல ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தலை அதிகாரிகளே தள்ளி வைத்துள்ளனர். உடல்நிலை சரியில்லை எனக் கூறி தன்னிச்சையாக தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.

 

இந்த இடங்களில் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் நடத்துவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என டி ஆர் பாலு வலியுறுத்தினார். மேலும் பல இடங்களில் முடிவுகளை தன்னிச்சையாக அறிவித்துள்ளதாகவும், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் செய்வதாகவும் டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon