அன்னூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த அம்பாள் பழனிச்சாமி தேர்வு !!
நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் கோவை மாவட்டம் அன்னூரில் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராக அதிமுக – வை சேர்ந்த அம்பாள் பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மொத்தம் 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஒன்றியத்தில் அ.தி.மு.க எட்டு உறுப்பினர்களும், தி.மு.க ஆறு உறுப்பினர்களும், சுயேட்சை இரண்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.
இதில் அ.தி.மு.க – வை சேர்ந்த அம்பாள் பழனிச்சாமி மனுதாக்கல் செய்த நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யபட்டார்.
வெற்றி பெற்ற அவருக்கு அதிமுக கட்சி நிர்வாகிகளும்,தொண்டர்களும் பொன்னாடை போர்த்தியும்,மாலை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.





