--- --:--:-- --

ஜே.என்.யூ மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரும் போராட்டங்கள்

1

ஜேஎன்‌யு மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது. ஜேஎன்‌யுவில் நடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி விலகக் கோரியும், தாக்குதலை கண்டித்தும் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் காயமடைந்த மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து ஜேஎன்‌யு மாணவர் சங்க தலைவரான ஆயுஷ் கோஷை சந்தித்தார்.

 

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு துணைவேந்தரும் உடந்தை என்றும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஃபிரெஞ்சு பேராசிரியர் அஜித் கூறினார். அதேவேளையில் மாணவர்கள் மீதான தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை கண்டறிய காங்கிரஸ் கட்சி சார்பில் நான்கு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுஷ்மிதா தேவ் என்பவர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இந்த தாக்குதலை கண்டித்து ஜாமியா பல்கலைக்கழகம் நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தாக்குதலுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் தேசியக் கொடியை பிடித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon