--- --:--:-- --

இறந்த மகனின் ஆசையை நிறைவேற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற 73 வயது மூதாட்டி

4

பெற்றோர் கனவுகளை பிள்ளைகள் நிறைவேற்றுவது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக இறந்த தனது மகனின் கனவை நிறைவேற்ற வேண்டி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் 73 வயது மூதாட்டி. கிராமத்து பெண்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதும், ஊர் மக்களுடன் இயல்பாக பேசிக்கொண்டிருப்பதுமாக இருக்கும் மூதாட்டி.

 

73 வயதாகும் இந்த மூதாட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 60 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கிய இவர் தனது மகனின் கனவுகளை நிறைவேற்றவே உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டதாக கூறுகிறார். இவரது ஒரே மகனான சித்தன் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றியவர்.

 

இவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊர் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டவர். ஆனால் அதற்குள் இறப்பு இவரை உறுதி கொண்டது. அதனால் மகனின் கனவுகளை நிறைவேற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக கூறுகிறார் மூதாட்டி . ஊராட்சிக்கு தேவையான வசதிகளை செய்து தந்து தனது மகனின் விருப்பங்களை நிறைவேற்றுவதே தனது லட்சியம் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்த பாசத்திற்குரிய பாட்டி.

Leave a Reply

Right Menu Icon