பணம் வாங்கிவிட்டு வாக்களிக்கவில்லை..! சுவரொட்டி ஒட்டிய வேட்பாளருக்கு பதிலடி
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவர் வாக்காளர்களுக்கு தலா 250 ரூபாய் வீதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஆதங்கத்தை வாக்காளர்களை வசைபாடி ஊரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டி இருக்கிறார் அந்த முகம் தெரியாத வேட்பாளர். அவருக்கு மீம் கிரியேட்டர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.





