--- --:--:-- --

ஈழத் தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசினார்: சீமான்

6

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் ஈழத்தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசியது பற்றி தன்னிடம் தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார் என்றும், அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முதலில் சென்று உதவியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் தான் என தெரிவித்த சீமான், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு படிப்பிற்கு ஏற்றார்போல் அரசு வேலை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

 

உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும், 2021 சட்டப்பேரவை தேர்தல் முடிந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தான் சரியாக இருக்கும் எனவும் சீமான் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon