--- --:--:-- --

அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை தொடர வாய்ப்பு

8

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் தற்போது மழை குறைந்து உள்ளது.

 

எனினும் தென் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. இந்த மழை அடுத்த நான்கு நாட்களுக்கு தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதனிடையே குமரிக் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் மற்ற மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதன்காரணமாக 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon