--- --:--:-- --

நோயாளியின் இடுப்பில் சிக்கிய ஊசித்துண்டு

3

தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு செலுத்தப்பட்ட ஊசி இடுப்பிலேயே உடைந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தம்பிதுரை என்பவர் கடந்த 22ஆம் தேதி காய்ச்சல் காரணமாக குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தம்பிதுரையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாக கூறி அவருக்கு ஊசி போடும்போது ஊசியின் முனை பகுதி உடைந்து இடுப்பிலேயே சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து வீடு திரும்பிய தம்பிதுரைக்கு ஊசி போட்ட இடத்தில் தொடர்ந்து வலி நீடித்து வந்ததால் சந்தேகமடைந்த அவர் வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அதில் 7 மில்லி மீட்டர் அளவுக்கு ஊசியின் முனை பகுதி எலும்பில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

 

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதற்கு உரிய பதில் தர மறுத்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறியுள்ளார். இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் ஊசியை அகற்றுவதற்காக தம்பிதுரை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon