--- --:--:-- --

வசதியில்லாதவங்க.. வயசானவங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்ல சீட் இல்ல..! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி!!

images (6)

வரும் உள்ளாட்சி தேர்தலில் வசதி இல்லாதவங்களுக்கும், வயசான பெரிசுகளுக்கும் சீட் கிடையாது. கம்ப்யூட்டர் உலகில் இளைஞர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடியாக பேசி, அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

 

சமீப காலமாக மேடையில் ஏறி மைக் பிடித்து விட்டாலே வாய்க்கு வந்தபடி பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருபவர் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.முகத்தை உர்ரென்று முரட்டுத்தனமாக வைத்துக் கொண்டு அவர் பேசும் பேச்சுக்கள் சில நேரங்களில் வைகைப்புயல் வடிவேலுவின் காமெடியையே மிஞ்சிவிடும்.

 

மோடியை டாடி என்பார். அதே நேரத்தில் நேருவை மாமா என்கிறார்களே.. அவர் என்ன எங்க அம்மா கூட பிறந்தவரா? மாமா என்றழைக்க என்றும் பேசுவார். அதே போல வில்லங்கத்தனமாக தலையை எடுப்போம், நாக்கை துண்டிப்போம் என்றும் கூட பேசி சர்ச்சையை கிளப்புவார். இவருடைய இப்படிப்பட்ட பேச்சுக்கள் பற்றி எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், முதல்வர் எடப்பாடியே கூப்பிட்டு கண்டித்தாலும் தன் பாணியை அவர் கை விட்டதாகவே தெரியவில்லை.

இப்போது, உள்ளாட்சித் தேர்தல் வேறு வர உள்ளதா?.விருதுநகர் மாவட்டத்தின் ஒரே மந்திரியாகவும், மாவட்டச் செயலாளராகவும் உள்ள ராஜேந்திர பாலாஜியின் பேச்சில் மேலும் ஸ்ருதி அதிகரிக்கவே செய்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அவருடைய பேச்சு இன்னும் ஒரு படி மேலாகவே போய்விட்டது.

 

உள்ளாட்சித் தேர்தல்ல நாம தான் ஜெயிக்கப் போறோம். அதிமுக காரன் யார் என்பதை எதிரிகளுக்கு நிரூபிக்கணும். சண்டை, சச்சரவுக்கெல்லாம் பயப்படக் கூடாது. அதிமுக காரன் சட்டை மீது எதிரி கை வைத்தால் அவன் சட்டையை கிழிக்கணும். நம்ம வீட்டு கதவு மேல எவனும் கை வைத்தால், அவன் வீட்டையே நொறுக்கிடணும் என்று தொண்டர்களை உசுப்பேற்றினார்.

 

அடுத்து அவர் பேசியது தான் கட்சியின் மூத்த தொண்டர்களை கடுப்பேற்றி விட்டது என்றும் கூறலாம். இந்தத் தேர்தல்ல சீட்டுக்காக நம்ம கட்சிக்குள்ளேயே கூட சண்டை வரத்தான் செய்யும். ஆனால், இந்தத் தேர்தல்ல வயசானவங்க, வசதியில்லாதவங்களுக்கு எல்லாம் சீட் கிடையாது. இப்போது எதற்கெடுத்தாலும் எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகி விட்டது. அதனால இளைஞர்களுக்குத்தான் இந்தத் தேர்தல்ல சீட் என்று தடாலடியாக அறிவித்தார்.

 

இதனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சால், கட்சியில நாம தான் சீனியர் ..நமக்குத் தான் சீட் .. என்ற நப்பாசையில் இருந்த அதிமுக பெரிசுகளும், வெற்றி பெறும் செல்வாக்கு இருந்தும் வசதி இல்லாத கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சியில் பேயடித்தது போல ஆகிவிட்டனர் என்றே கூறலாம்.

Leave a Reply

Right Menu Icon