பப்ஜி கேம் விளையாடுவது போல் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்
செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவது போல் நடித்து இளம்பெண் குளிப்பதை இரண்டு இளைஞர்கள் படம் பிடித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து காவல்துறை எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன ? செல்போனில் கேம் விளையாடுவது போல் இளம்பெண் குளித்ததை படம் பிடித்ததாக இளைஞர்கள் மீது வழக்கு பதியப் பட்டிருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் காரியாமங்கலம் அடுத்த குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாரத் மற்றும் சக்திவேல். இருவரும் திருப்பூர் பிஎன் ரோடு வாவிபாளையம் அடுத்த வாரணாசி பாளையம் பகுதியில் தங்கியபடி எலக்ட்ரிக் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருமுருகன்பூண்டி அடுத்த ராக்கியாபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் பாரத் மற்றும் சக்திவேல் ஆகியோர் எலெக்ட்ரிக் வேலை பார்த்துள்ளனர்.
அப்போது மத்திய உணவு சாப்பிட்டு விட்டு இருவரும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பப்ஜி கேம் விளையாடுவது போல் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த அதிர்ச்சி அடைந்த அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் பாரத் மற்றும் சக்திவேலை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் பலத்த காயமடைந்த பாரத் மற்றும் சக்திவேல் திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே வழக்கு பதிவு செய்த திருமுருகன்பூண்டி காவல் நிலைய காவல் துறையினர் இருவரையும் தாக்கிய கனகராஜ் மற்றும் ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.இந்த பரபரப்புக்கு இடையே பாரத் மற்றும் சக்திவேல் ஆகியோர் குளித்துக்கொண்டிருந்த தன்னை ஜன்னல் வழியே செல்போனில் படம் பிடித்ததாக திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் சம்பந்தப்பட்ட இளம்பெண் புகார் அளித்திருக்கிறார்.
அதன் பேரிலும், பாரத் மற்றும் சக்திவேல் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்ததாக இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டதும், இளம்பெண் கொடுத்த புகாரின்படி 2 இளைஞர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




