--- --:--:-- --

இளைஞனை படுகொலை செய்து நாடகமாடிய எஸ்ஐ க்கு… ரூ.2 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை! -அதிரடி தீர்ப்பளித்தது இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம்

16

திருவாடானை அருகே காவல் நிலையத்தில் வாலிபரை சுட்டுக்கொன்ற சார்பு ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது முகமது, 24.இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்தார்.

 

இவரை கடந்த 2014, அக்டோபர் 14ஆம் தேதி மதியம் , ஒரு புகார் தொடர்பாக எஸ்.பி. பட்டினம் போலீசார் விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு சைய்யது முகமதுவை , சார்பு ஆய்வாளர் காளிதாஸ் சுட்டுக்கொன்றார்.

இது தொடர்பாக காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இறுதி விசாரணைக்கு பின், சார்பு ஆய்வாளர் காளிதாசுக்கு ரூ. 2 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Right Menu Icon