--- --:--:-- --

இன்று கரையை கடக்கும் அக்வான் புயல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.!

2

‘அக்வான்’ புயல் கரையைக் கடக்க இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடலோரப் பகுதிகளில் தீயணைப்புப் படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் கடற்கரை முழுவதும் சிவப்பு எச்சரிக்கை கொடிகள் நடப்பட்டுள்ளன.

 

80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சூழலில், 74 மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, புவனேஸ்வர், பத்ரக் உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல, அக்வான் புயலை எதிர்கொள்ள ஆந்திரப்பிரதேசத்திலும் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீகாகுளத்தில் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon