சரிந்த தங்கம் விலை..!
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது. 10 நாட்களில் மட்டுமே சவரனுக்கு ரூ. 13,600 சரிந்துள்ளது.
அந்த வகையில் மீண்டும் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்து அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.11,980க்கும், சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.95,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.470 குறைந்து ஒரு கிராம் ரூ.11,510க்கும், சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ஒரு சவரன் ரூ.92,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.385 குறைந்து ஒரு கிராம் ரூ.9,420க்கும், சவரனுக்கு ரூ.3,080 குறைந்து ஒரு சவரன் ரூ.75,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.175க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




