ரூ.5,000 கோடி நஷ்டத்தை சந்தித்த வோடபோன்
இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்கவில்லை என்றால் தாங்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என வோடஃபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடஃபோன் கடந்த காலாண்டில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வரி உயர்த்தப்பட்டது, உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை அதிகரித்தது என்ற அரசு மாற்றி அமைத்த விதிமுறைகளால் வோடபோன் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ரிலையன்ஸ் போன்ற மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கும் அதிக அளவு சலுகைகளால் தங்கள் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சிக்கல்களை இந்திய அரசு கலையவில்லை என்றால் இந்தியாவிலிருந்து வோடபோன் நிறுவனம் வெளியேறும் சூழல் உருவாகும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கவும் கடினம் என்றும் கூறியிருக்கிறார்.






