--- --:--:-- --

புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த சி.ஜே.பி!

2

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கடந்த சில தினங்களாக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (அக்டோபர் 10) சி.ஜே.பி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் டெல்லி காவல்துறை துரிதமாக செயல்பட்டு போராட்டக்காரர்கள் பலரையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்திருந்தனர்.

 

 

 

இதனிடையே, இன்று (அக்டோபர் 11) காலை 10 மணிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் மற்றொரு போராட்டத்திற்கு சி.ஜே.பி அழைப்பு விடுத்துள்ளது. நேற்று (அக்டோபர் 10) நடந்த போராட்டங்கள் மற்றும் இதில் பலர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, டெல்லி காவல்துறை தலைநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வீதி மற்றும் ஜந்தர் மந்தரில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கிறது.

 

 

 

மேலும் 200 கம்பெனி துணை ராணுவப் படைகளின் ஆதரவுடன் சுமார் 30,000 காவல் துறையினர் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர். நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் சி.ஜே.பி தலைவர்கள் விடுவிக்கப்படுவார்களா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் நிலையில், இன்று மேலும் ஒரு புதிய போராட்டம் தொடர்பான அழைப்பு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சி.ஜே.பி-யின் தேசிய அமைப்புப் பொறுப்பாளர் அஜிங்க்யா ஷிண்டே, ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் ‘சலோ ஜந்தர் மந்தர்’ போராட்டத்தை அறிவித்ததுடன், ஆதரவாளர்களை இன்று (அக்டோபர் 11) காலை 10 மணிக்கு ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொண்டார்.

 

 

மேலும், 12 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்த ஞனேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுது்தி, நாங்கள் ஜந்தர் மந்தருக்குச் சென்றிருந்தோம். ஆனால் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான இந்த சர்வாதிகார அரசு, நமது தலைவர்களான அபீஜித் திப்கே, அசுதோஷ் ரான்கா மற்றும் சௌரப் தாஸ் ஆகியோரையும், அனைத்து மாணவர் தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களையும் கைது செய்தது.

 

இன்று எங்களைக் கைது செய்தால், பயந்து பின்வாங்குவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மோடி மற்றும் ஷாவின் இந்த பயம், நாம் ஏற்கனவே பாதி போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதைக் காட்டுகிறது. இது ஒரு புதிய போராட்டத்தின் தொடக்கம். நாங்கள் முன்பு செய்ததைப் போலவே அவர்களின் அகந்தையை உடைப்போம் என்று மோடி மற்றும் ஷாவிடம் சொல்ல விரும்புகிறேன். ஞானேஷ் குமார் தனது ராஜினாமா செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.

 

 

நாளை (இன்று, அக்டோபர் 11) காலை 10 மணிக்கு, நாங்கள் மீண்டும் ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாகச் செல்வோம். அனைவரும் பெருமளவில் திரண்டு வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். டெல்லி காவல்துறை உங்களை எங்கு தடுத்தாலும், அந்த இடத்தையே உங்கள் ஜந்தர் மந்தராக மாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

சி.ஜே.பி அறிக்கையின்படி, மாணவர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட 15,000-க்கும் மேற்பட்டோர் கைது நடவடிக்கை மற்றும் காவல்துறை நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். நேற்று போல் (அக்டோபர் 10) இன்றும் (அக்டோபர் 11) காவல்துறைப் படைகள் பணியில் இருக்கும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. “சூழ்நிலையைப் பொறுத்து மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்” என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

 

 

சனிக்கிழமை இரவு சிபி-யில் பாதுகாப்புப் பணியாளர்கள். (புகைப்படம்: தாஷி டோப்கியால்)
ஐஎன்ஏ (INA), ராஜ் காட் மற்றும் செங்கோட்டை உட்பட தெற்கு, மத்திய மற்றும் புது டெல்லி மாவட்டங்களில் உள்ள பதற்றமான இடங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று (அக்டோபர் 10) ஐஎன்ஏ மற்றும் கன்னாட் பிளேஸ் உட்பட பல இடங்களில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்றும் அதிகளவிலான மக்கள் திரளக்கூடும் என்பதால், போராட்டக்காரர்கள் மீண்டும் ஜந்தர் மந்தர், கன்னாட் பிளேஸ் மற்றும் மத்திய டெல்லியின் பிற பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று காவல்துறை எதிர்பார்க்கிறது.

 

 

இந்த போராட்டம் காரணமாக நாளையும் (அக்டோபர் 12)தேவைப்படும் பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கையை முடிவு செய்வதற்கு முன், இன்று மாலை நிலவரத்தை காவல்துறை ஆய்வு செய்யும்” என்று ஒரு அதிகாரி கூறினார். நேற்று இரவு வரை பல மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் விடுவிக்கப்படாததால், ஏ.ஐ.எஸ்.ஏ (AISA) மற்றும் எஸ்.எப்.ஐ (SFI) தலைவர்கள் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும், சி.ஜே.பி-எஸ்.எப்.ஐ-ஏஐ.எஸ்.எப் (CJP-SFI-AISF) கூட்டணி வரும் நாட்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon