--- --:--:-- --

திட்டங்களைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

1

இன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.டெல்லியில் இருந்து இன்று காலை 11 மணி அளவில் சென்னை வந்தடையும் பிரதமர் மோடி, 11.30 மணிக்கு சென்னை போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் நண்பகல் 12.15 மணி அளவில் சென்னை ஐஐடி அருகே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

 

அதன்பிறகு, சென்னை ஐஐடியில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிற்பகல் 1.30 மணி அளவில் கிண்டி வித்யாலயா மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 

 

குறிப்பாக, 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வேத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர், புனரமைக்கப்பட்ட 5 ரயில் நிலையங்களைத் திறந்து வைக்கிறார்.

 

மாலை 3 மணி அளவில் சென்னையில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்றுவிட்டு, பிரதமர் மோடி டெல்லி திரும்ப உள்ளார். இந்நிலையில், சென்னை போரூர் பைபாஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் நிலையம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon