--- --:--:-- --

தவெகவை விமர்சித்ததாக பரவும் வீடியோ – சத்தியபாமா விளக்கம்!

1

தவெகவை விமர்சிக்கும் வகையில் பேசியதாக வெளியான வீடியோ குறித்து அக்கட்சியின் தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா விளக்கம் அளித்திருக்கிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்ற நிலையில் அவர்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து காலியாக உள்ள இத்தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

 

 

 

இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம்தமிழர் கட்சி என இத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய சத்தியபாமா தற்போது தவெக வேட்பாளராக களம் காண்கிறார். இந்த தொகுதியில் திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ கட்சி சார்பாக லட்சுமணன், நாம் தமிழர் கட்சியிலிருந்து கார்த்திகா என 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நேற்றிரவு தவெக வேட்பாளர் சத்தியபாமா தவெகவை விமர்சித்ததாக வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், “போன தடவ ரூ.31 கோடி செலவு பண்ணேன். ஒரு பைசா கொடுக்கல. அந்த மாதிரி இருந்துட்டு இந்த நாய்களோட சேர்றதை சத்தியமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சர்களுக்கு ரூ. 14 லட்சம் வரை செலவழித்தேன். கூட்டணி கட்சிகளுக்கு விமான டிக்கெட் கேட்பாங்க. எதோ எங்களுக்கு உள்ளானதை பண்ணிட்டு இருக்கோம்” என்று தவெகவை விமர்சிக்கும் வகையில் சத்தியபாமா பேசியதாக சொல்லப்படும் வீடியோ வைரலானது.

 

இந்த நிலையில் தான் தாராபுரத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தவெக வேட்பாளர் சத்தியபாமா மதுக்காம்பாளையம் வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் வலைதளங்களில் வெளியாகி வரும் வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு, அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என விளக்கம் அளித்த சத்தியபாமா, வெற்றி வாய்ப்பு எனக்கு நன்றாக இருக்கிறது என்பதால் இதுபோல் சித்தரிக்கப்பட்ட வீடியோவை பரப்புகின்றனர் என்றும் புகார் கூறினார். தனக்கு எதிரான அந்த வீடியோ உண்மையானதல்ல என்றும் மக்கள் தெளிவாக உள்ளனர், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்றும் அவர் கூறினார். மேலும், சர்ச்சை தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon