--- --:--:-- --

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு!

1

லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி வாயிலாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 6 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

 

அண்மையில் தான் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடந்தன. இந்த முறை எந்த பெரிய சர்ச்சைகளும் இல்லாமல் தேர்வுகள் நடந்து முடிந்தன. இதன் முடிவுகளை தேர்வர்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில் தான் அட்டவணையில் கடைசியாக இடம்பெற்றுள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டு தேர்வு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நாளை இணையதளத்தில் வெளியிட உள்ளது.

 

 

நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள காலிப்பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளதால் நாளை வெளியிடப்படும் குரூப்-4 தேர்வு அறிக்கையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றது, கடந்த சில ஆண்டுகளில் அதிக பணியிடங்கள் அறிவிக்கப்படாதது ஆகியவை காரணமாக இந்த முறை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon