மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது: நிர்மல்குமார்
எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட இரங்கல் பதிவில், “கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




