ஒரே நாளில் தலைகீழாக சரிந்த தங்கம் விலை..!
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,185க்கும் சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.11,955க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.95,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




