--- --:--:-- --

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

1

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவக் கண்காணிப்பில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 10ஆம் தேதி காலை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், பல்துறை நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இன்றும் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

இதுதொடர்பாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை இன்று (செப்.19) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு சுவாசக் கோளாறு காரணமாக 2026 செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரது மருத்துவ அளவீடுகள் சீராக இருப்பதுடன், ஊக்கமளிக்கும் வகையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் உடல் நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon