நெடுஞ்சாலை துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு..!
நெடுஞ்சாலை துறை மீதான பதிலுரையில் நெடுஞ்சாலை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டார். அதில், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் தொழில்தட விரைவுச்சாலை உருவாக்கப்படும்.
சென்னை கன்னியாகுமரி 8 வழிச் சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகளை மேம்படுத்துதல், திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு உயர்மட்டச் சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை – மாமல்லபுரம் – புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்டச் சாலைத் தொடர், மும்பை – நவி மும்பை கடல் இணைப்புச் சாலை போன்று கட்டம் கட்டமாக உருவாக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




