சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை: 17-ம் தேதி மானியக் கோரிக்கை விவாதம்
சட்டசபையில் இன்று, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. நாளை (13-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (14-ந் தேதி) சட்டசபை கூட்டம் கிடையாது.
மறுநாள் (15-ந் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை வருகிறது. இப்படி, தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்து வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கின்றது. அன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் தொடங்குகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





