ஆதவ் அர்ஜுனா – உதயநிதி : சட்டமன்றத்தில் காரசார விவாதம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து ரூ. 900 கோடி நிதி வாங்கியது தொடர்பான விவாதத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. அதன்படி கடந்த 5ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பட்ஜெட் மீதான பொது விவாதங்கள் தொடங்கி நடந்துவருகிறது.
அந்த வகையில் இன்று பொது விவாதத்தில் டாஸ்மாக் துறை குறித்தான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திமுக பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா இல்லையா? ஜெகத்ரட்சகன் சாராய ஆலை வைத்துள்ளாரா இல்லையா? லாட்டரி நிறுவனத்திடமிருந்து ரூ. 900 கோடியை வாங்கியது ஏன்? நான் லாட்டரி உட்பட எந்த தொழிலிலும் ஈடுபடவில்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கொடுத்தது அமைச்சரின் மாமனார்தான். அவர்தான் ஏன் கொடுத்தார் என தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதற்கு பதில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “வீட்டுக்கு போய் உங்க அப்பாவிடம் கேளுங்க அவர் சொல்லுவார்” எனத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




