டெல்லியைத் தொடர்ந்து சென்னையை அச்சுறுத்தும் காற்று மாசு
டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் அங்குள்ள வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றி வருகின்றனர். தீபாவளிக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை சற்று ஓய்ந்தது. தற்போது பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சென்னையில் வாகன புகை உள்ளிட்ட நச்சுக்கள் வளி மண்டலத்தில் பரவி வருகின்றன. இந்நிலையில் சென்னையில் 3-வது நாளாக அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றின் மாசு அதிகரித்துள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காற்றில் உள்ள நுண் துகள்களின் அனுமதிக்கப்பட்ட அளவு 50 மைக்ரோ கிராமாக உள்ள நிலையில் சென்னையில் பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் நிலவுகிறது.





